பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அந்நாட்டு பீல்ட் மார்ஷலுக்கு அளித்த நினைவுப் பரிசு இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக ஆப்ரேஷன் பன்யான் அல் மார்சஸ் எனும் பெயரில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் பின்னடைவைச் சந்தித்தது.
இதனிடையே ஆப்ரேஷன் பன்யானை முன்னெடுத்த அந்நாட்டு பீல்ட் மார்ஷல் அசீம் முனீரூக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புகைப்படம் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தார்.
இந்நிலையில், அந்த புகைப்படம் சீனாவின் ராணுவ ஒத்திகையின்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்த நிலையில், போரில் வெற்றி பெற்றதாக உலக நாடுகளை நம்பவைக்கப் பாகிஸ்தான் அரசு புகைப்படத்தைக் கூட காப்பி அடித்துப் பரிசளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.