ஏப்ரல் 22-ல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால் பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அமைச்சரைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு வெளியே முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலைத் தைரியத்தோடும், துணிவோடும் எதிர்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த உமர் அப்துல்லா, இந்த தாக்குதல் சம்பவத்தால் பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது என உறுதியளித்தார்.