கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக கனமழை நீடிப்பதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 14 கன அடியும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 384 கன அடியும் நீர்வரத்து காணப்படுகிறது.
சிற்றாறு ஒன்று மற்றும் இரண்டாம் அணைகளிலும் தண்ணீர் வரத்து காணப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.