திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 2, 2025, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நாடு போற்றும் நல்லாட்சி” என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையை, நம் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் கல்வித்துறையை சீரமைப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை. பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இது போதாதென்று, 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது, துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை. வினாத்தாள் கசிவு, பல்கலையில் மதப்பிரச்சாரம் உயர்க்கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது.

ஒரு காலத்தில் ஆன்றோர்களால் “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” எனப் போற்றப்பட்ட மாநிலம், தற்போது புகார்களின் கூடாரமாகி, படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழித்து, “கல்வியிற் சீரழிந்த தமிழ்நாடாக” திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிகவும் கொடுமையானது.

ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது. ‘அப்பா’, ‘பல்கலை வேந்தர்’ என தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில், கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். “ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19,260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என்பதே உண்மை.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் எல்லா நன்மையும் முன்னேற்றமும் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை, நம் தமிழக மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும். பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Is advertising important under DMK rulebut education ignored?: Nayinar Nagendran questionsDMKMK Stalinநயினார் நாகேந்திரன் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் : எல்.முருகன்

Next Post

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

Related News

திருவள்ளூர் : ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெட்டி கொலை!

கன்னியாகுமரி : பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி மீது ஆசிரியர் புகார்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

“தணல்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

இன்றைய தங்கம் விலை!

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies