பால்வளத்துறையில் முறைகேடு - 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
Mar 22, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பால்வளத்துறை முறைகேடு புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்திய விவகாரத்தில் பால்வளத்துறை ஆணையர் கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற கிளையில் கிறிஸ்துதாஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் ஆகியோருக்கு எதிராக பொதுத்துறையில் ஒரு தனி நடவடிக்கை தொடங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஊழல் செய்த அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்படும்போது தவறு செய்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கருத்து தெரிவித்தார்.
குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் இருப்பதால் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மற்றும் மனுதாரர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,
அடுத்தகட்ட மேல் நடவடிக்கையை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மேற்கொள்ள வேண்டும் என ஆணையிட்டார்.

மேலும், பால் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கையை மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags: Madurai bench of the High CourtIAS officers KamarajDairy Commissioner Christodascooperative societies.
ShareTweetSendShare
Previous Post

தரமற்ற முறையில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

Related News

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies