திருவள்ளூரில் பாஜக பிரமுகரை ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் ஆய்வாளர் அரிவாளைக் கொண்டு மிரட்டிய காட்சிகள் வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரம்பாக்கம் அருகே சின்ன ஒபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த பாஜகவின் முன்னாள் மாவட்டச் செயலாளரான தியாகு, எலாவூர் பஜாரில் கட்சி அலுவலகம் வைத்துள்ளார்.
கடந்த 5 மாதமாக கட்சி அலுவலகத்தை காலி செய்ய வலியுறுத்தி இடத்தின் உரிமையாளரான ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் முனிரத்தினம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் முனிரத்தினம் வீச்சரிவாளை எடுத்து வந்து தியாகுவை மிரட்டி உள்ளார். தனது குழந்தையுடன் தியாகு அலுவலகத்தில் இருந்தபோது அரிவாளால் வெட்ட வந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முனிரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.