சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் என்பவர், நகை காணாமல் போன வழக்கு தொடர்பாகக் காவலர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
உடற்கூராய்வு அறிக்கையில் அஜித்குமாரின் உடம்பில் காயங்கள் இல்லாத இடமே இல்லை எனும் தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அஜித்குமார் கொலைக்குக் காரணமான காவல்துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, திருப்புவனத்தில் அதிமுக மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் ஆர்.பி.உதயக்குமார், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.