கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்பிரிக்கக் கண்டத்தின் நம்பிக்கை ஒளியாகக் கானா திகழ்வதாகப் புகழாரம் சூட்டினார்.
2 நாள் அரசுமுறைப் பயணமாகக் கானா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து கானா நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றிய அவர், ஜனநாயகத்தை நிலைநாட்டும் ஆட்சி கானாவில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகக் கூறிய பிரதமர், இந்தியாவில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளதெனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆப்பிரிக்கக் கண்டத்தின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்வதாகப் புகழாரம் சூட்டினார்.
கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.