பாஜக-வினரும், அதிமுக தொண்டர்களும் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து உழைக்கின்றவர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், புலியகுளத்தில் பேசிய அவர்,சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத நிலையில் திமுக அரசு உள்ளதாகவும், தமிழகம் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்க பாஜக அரசும் ஒரு காரணம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்து என்றும், போதையின் பாதையில் செல்லாதே என முதலமைச்சரே சொல்லும் அளவிற்கு போதைப்பொருள் விற்பனை நடப்பதாகவும் கூறினார்.
புதிதாக திறக்கப்பட்ட அரசு கல்லூரிகளுக்கு இன்னும் முதல்வர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், அரசு துறைகளில் 4 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடங்கள் இன்னும் நிரப்படாமல் உள்ளதாகவும் கூறினார்.
கடன் வாங்குவதில் நாட்டிலேயே சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும், தமிழகத்தில் இனி பிறக்கப்போகும் ஒவ்வொரு குழந்தையின் மீது கடன் இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.