ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர் முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார்.
விவசாயிகளின் குழந்தைகள் நல்ல நிலைமைக்கு வரக்கூடாது என நினைப்பது தான் ஸ்டானின் அரசாங்கம் என்றும், கிராம புறத்தில் உள்ளவர்கள் யாரும் கல்வி கற்க கூடாது என நினைப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் ஏழை மாணவர்களை உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில வைத்ததாகவும், அதிமுக ஆட்சிகாலத்தில் ஒரு ரூபாய் செலவில்லாமல் மாணவர்களை மருத்துவம் பயில வைத்ததாகவும் அவர் கூறினார்.
திண்டிவனம் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏராளமான அதிமுகவினர் மேள தாளங்களுடன் சாலையில் குவிந்தனர். 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மின்னொளி பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், இபிஎஸ்-ன் முகமூடியை அணிந்தவாறும் குவிந்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டனர்.