ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 14ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக மகா கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதில் முக்கிய நிகழ்வான தீர்த்த குடம் ஊர்வலம் வெகுவிமரிசயைாக நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்தனர்.
காங்கேயம் காளைகள், ராஜஸ்தான் ஒட்டகங்கள், கேரள செண்டை மேளம், குதிரை நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோபி சீதா கல்யாண மண்டபத்தில் துவங்கிய இந்த ஊர்வலம், 5 கிலோமீட்டர் தூரம் வரை, வாணவேடிக்கையுடன் விமர்சையாக நடைபெற்றது.