திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மொட்டை மாடி, நடைபாதையில் அமர்ந்து கல்வி கற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மொட்டை மாடி, பள்ளி வராண்டா, நடைபாதைகளில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயிலும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் வகுப்பறைகள் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.