ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் பேசியவர்,
கொள்கையே இல்லாத கட்சிகள் ஒரே அணியில் உள்ளது என்றும், மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி, ஊழலற்ற ஆட்சி என்பதை மறந்துவிட கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்றைக்குத் தமிழகத்தில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்தது, இன்று முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் தூக்கம் வரவில்லை, அமைச்சர்கள் ஓட்டுக்கு 2000 கொடுக்கலாமா 3000 கொடுக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு திமுக வராது என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அன்பைக் கொடுத்து ஆட்சியமைக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.