திமுக செய்யும் தவறுகளை, அதன் கூட்டணி கட்சிகள் சுமந்து திரிவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை என்றும், மீனவர்களை பற்றி சிந்திக்காத கட்சி திமுக என்றும் சாடினார்.
மத்திய அமைச்சரவையில் 16 ஆண்டுகள் இருந்த போதும் கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுத்ததும் அதிமுக அரசுதான் என்றும், 50 ஆண்டு காலம் சட்ட போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு சாதமாக நல்ல தீர்ப்பை பெற்று தந்தது அதிமுக அரசு என்றும் இபிஎஸ் கூறினார்.
டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக பெற்று ஆண்டுக்கு ரூ.5,400 கோடி கொள்ளை அடித்தது திமுக அரசு எனறும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.