பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் தஞ்சை வடக்கு வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பிற்பகல் 3 மணியைக் கடந்தும் உணவு வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் தமிழக அரசைக் கண்டித்து மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.