எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!
Sep 19, 2026, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் புளோரிடாவின் சதை உண்ணும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் மரணமடைந்த செய்தி பலரையும் உலுக்கியுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் முகத்துவார பகுதிகளில் காணப்படும் நிலையில், கடலில் நீராடுபவர்கள், மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

அமெரிக்காவில்  ஒரே மருத்துவ காரணத்திற்காக  4 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில், அவர்கள் நால்வரும் புளோரிடா கடலில் நீராடியதும், சதை உண்ணும் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

(Vibrio vulnificus) விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பெயர் கொண்ட இந்த பாக்டீரியா, கடலுடன் நன்னீர் கலக்கும் கழிமுக பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா வகையைச் சேர்ந்தது என்றாலும், Vibrio vulnificus பாக்டீரியாக்கள் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

புளோரிடா கடலோர பகுதி 20 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்ப நிலையைக் கொண்டிருப்பதால், இவ்வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. காயங்கள், சிராய்ப்பு மூலமாகவும், பச்சையான கடல் உணவுகள் குறிப்பாகப் பச்சை சிப்பிகளை உண்பதன் மூலமாகவும் மனிதனுக்குப் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

மனித உடலுக்குள் புகுந்ததும், காயத்தைச் சுற்றி அதிகப்படியான வலி, கொப்புளங்கள் ஏற்படும், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் எதிர்வினையாற்றும் இவ்வகை பாக்டீரியாக்கள், திசு மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சில நேரங்களில் உடல் உறுப்புகளைத் துண்டித்து நோயாளியைக் காப்பாற்றினாலும், பெரிய அளவில் பலனளிக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், முதியவர்கள் இவ்வகை பாக்டீரியாக்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான சதை உண்ணும் பாக்டீரியாக்களிடம் இருந்து தப்பிக்க, வெதுவெதுப்பான கடல் நீரில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும், கடல் உணவைச் சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Tags: Doctors warn: Flesh-eating bacteriaஎச்சரிக்கும் மருத்துவர்கள்சதை உண்ணும் பாக்டீரியாஅமெரிக்காவின் புளோரிடா
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies