பஹல்காம் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன், நல்ல முறையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை நல்ல முறையில் முடிந்து பூரண உடல்நலத்துடன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர்ந்து அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்த மருத்துவர் பரமேஸ்வரனுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் தனது சொந்த ஊரான கரூருக்கு புறப்பட்டுச் சென்றார்.