ஏழை மக்களுக்கு உரிய நிதியை வழங்காமல் மத்திய அரசு மீது திமுக பழி சுமத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பேசிய அவர், காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவிற்கு அதிமுகவை விமர்சிக்க தகுதி இல்லை என தெரிவித்தார்.
திமுக ஒரு கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி என்றும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு திமுக அரசு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும் சாடினார்.
மக்களின் வாக்குகளைப் பெற திராவிட மாடல் அரசு தந்திரமாக செயல்பட்டு வருவதாகவும், அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தில் ஏழைகள் இல்லாத நிலை உருவாகும் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.