தலைநகர் டெல்லியில் கடமை பாதை அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டெல்லி கர்தவ்ய பாதை அருகே கர்தவ்ய பவன் கட்டப்பட்டது.
பல்துறைகள் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் கட்டட வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.