ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்ற நாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்…
அதன்படி சீனா 13 புள்ளி 92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து முதலிடத்தில் உள்ளது. டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள இந்தியா, 10 புள்ளி 06 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக துருக்கி 5 புள்ளி 45 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்து மூன்றாம் இடத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் 2 புள்ளி 03 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்து நான்காம் இடத்திலும் இருக்கிறது.
பிரேசில் 1 புள்ளி 72 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்து ஐந்தாம் இடத்திலும், சிங்கப்பூர் 1 புள்ளி 17 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்து ஆறாம் இடத்திலும் உள்ளது. ஹங்கேரி 1 புள்ளி 17 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்து ஏழாம் இடத்திலும், தென்கொரியா 1 புள்ளி 12 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்து எட்டாம் இடத்திலும் உள்ளது,
சவுதி அரேபியா 96 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஒன்பதாம் இடத்திலும், ஸ்லோவாக்கியா 89 ஆயிரம் கோடி ரூபாயுடன் 10-ம் இடத்திலும் உள்ளன.