இந்திய ரயில்வே நாட்டின் மிக நீளமான சரக்கு ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது.
ருத்ராஸ்த்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளமுடையது. இந்த ரயிலில் மொத்தம் 354 பெட்டிகளும் அவற்றை இயக்க 7 என்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரயில் மணிக்குச் சராசரியாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். இந்த ரயில் முதற்கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் கஞ்ச் கவாஜா ரயில் நிலையத்திலிருந்து, கர்வா ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டுள்ளது.
200 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தை ருத்ராஸ்த்ரா ரயில் 5 மணி நேரத்தில் கடந்துள்ளது. மேலும் இந்த ரயில், குறைந்த பணியாளர்களுடன், நேரத்தையும் மிச்சப்படுத்துவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ருத்ராஸ்த்ரா ரயில் செல்லும் வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.