பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? - 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Jan 18, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாகப் பாலாற்றில் கழிவு நீரை வெளியேற்றும் தோல் பதனிடும் ஆலைகளை மூட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி விரிவான உத்தரவு வழங்கியது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பெரும் சவாலாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளாகச் செயல்பாட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லாதது கவலை அளிக்கிறது எனக் கூறினர்.  பாலாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,

உத்தரவு காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது, முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.  பாலாறு மாசுபடுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது நோக்கம் எனக்கூறிய நீதிபதிகள்,

மாவட்ட ஆட்சியர்கள் முயற்சி செய்யாதவரை எதுவும் நடக்காது எனத் தெரிவித்தனர். கழிவுநீர் மாசுவை தடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாகத் தமிழக மாவட்ட ஆட்சியர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்,

பாலாறு மாசுபாட்டைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags: tn govtWhat kind of measures are you taking to prevent pollution in Palaru? - Supreme Court orders Tamil Nadu government to file a report within 2 weeksபாலாறு மாசுபாடுsuprem court
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

Next Post

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies