ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் ரயில்வே கேட்டில் நடக்கவிருந்த பெரும் விபத்து ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டது.
ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் வழுதூர், உச்சிப்புளி ரயில் நிலையங்களைக் கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், வழுதூர் ரயில்வே கேட் பகுதியை நோக்கி சேது விரைவு ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததைக் கவனித்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியதுடன், ரயிலிலிருந்து இறங்கி வந்து கேட் கீப்பரை எச்சரித்தார்.
அதன்பின்னரே கேட் மூடப்பட்டது. அலட்சியமாகச் செயல்பட்ட கேட் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.