அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி காந்தி மார்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர்,. அதிமுக – பாஜக கூட்டணியால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்ற தவறான செய்தியை திமுக பரப்புவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்றும், 2026 -ல் அதிமுக ஆட்சியில் சட்டை வேட்டி இரண்டையும் ஸ்டாலின் கிழித்துக் கொள்வார் என்றும் இபிஎஸ் கூறினார்.