மதுரை பாலமேடு அருகே சேதமடைந்த பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணிக்கும் பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வி.புதூர் பகுதியில் இருந்து பெரியார் நிலையம் நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்தததில் சேதமடைந்திருந்த அரசுப் பேருந்து ஒழுக தொடங்கியது. இதனால் அவதிக்குள்ளான பயணிகள் நனைந்தபடி பயணித்தனர்.
இதற்கிடையே, பெண் பயணி ஒருவர் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.