குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கும் என, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்த அவர், இந்திய மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு, நியமற்றது மற்றும் முறையற்றது எனவும், ரஷ்யாவுடனான
வணிக தொடர்பு உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதே தங்களின் நோக்கம் எனவும், எங்கெல்லாம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் கிடைக்கிறதோ அங்கிருந்தெல்லாம் எண்ணெய் வாங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருவதையும் வினய் குமார் சுட்டிகாட்டினார்.