சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!
Mar 22, 2026, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையைச் சீனா கட்டி வருகிறது. அதற்குப் பதிலடியாக, சியாங் நதியில் பல்நோக்குத் திட்டம் தடுப்பணையை இந்தியா கட்ட தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய-சீன எல்லையில் அருணாச்சல பிரதேசம் அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா பிரம்மாண்டமான அணையைக் கட்டி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் பிரம்மபுத்திரா நதியைப் பார்வையிட்ட சீனப் பிரதமர் லீ கேகியாங், அணைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தார். அதன் பின்னர்க் கடந்த ஆண்டில் அணைக் கட்டுமான பணியைச் சீனா தொடங்கியது

168 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்ட பட்டுவரும் இந்த அணையின் மூலம் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனச் சீனா கருதுகிறது. உலகிலேயே மிகப்பெரிய நீர் மின்சார அணையாக இதனைச் சீனா கட்டமைத்து வருகிறது.

சீனாவின் இந்த அணை, இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்றும், அருணாச்சலப் பிரதேசப் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் அழிந்து போகும் என்றும் அம்மாநில முதல்வர் பெமா காண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கு அணைக் கட்டுவதன் மூலம் தண்ணீரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, நீர் என்ற அணுகுண்டை இந்தியா மீது போட சீனா முயற்சி செய்கிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த அணையால், சியாங், பிரம்மபுத்திரா மற்றும் ஜமுனா ஆகிய நதிகள் கணிசமான அளவில் வறண்டு போகும். அதனால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். திடீரெனச் சீனா அணையைத் திறந்து விட்டால், வெள்ளத்தால், நிலச் சரிவுகள்,பூகம்பம் ஏற்பட்டு இயற்கை வளங்கள் அழிந்து போகும். அப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் நதியில் 11,000 மெகாவாட் நீர்மின் திட்டமான சியாங் பல்நோக்குத் திட்டத்தை இந்தியா செயல்படுத்த தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில் 5,500 மெகாவாட் அளவும்,இரண்டாம் கட்டத்தில் 3,750 மெகாவாட் என இரண்டு தனித்தனி திட்டங்களாகச் சியாங் அமைக்கப்பட்டுள்ளது. அதிகத் திறன் கொண்ட ஒற்றைப் பல்நோக்கு திட்டமாக இது ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

உள்ளூர் மேம்பாட்டுக்காக 325 கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டங்களையும் அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து தேசிய நீர்மின்சாரக் கழகம் உறுதியளித்துள்ளது. சியாங் பல்நோக்குத் திட்டத்தை அங்குள்ள 27க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் ஆதி பழங்குடியின மாணவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்நிலையில், சியாங் அணையின் முன்-சாத்தியக்கூறு அறிக்கைக்கான கணக்கெடுப்பை நடத்துவதற்காகச் சென்ற அதிகாரிகளைத் தடுத்துக் கணக்கெடுப்பு இயந்திரங்களை உள்ளூர் மக்கள் சேதப்படுத்தியுள்ளனர். தேசிய நீர்மின்சாரக் கழகத்தின் ஊழியர்களைத் தடுக்க,முக்கிய சாலைகளில் தற்காலிகக் கண்காணிப்பு சாவடிகளை உள்ளூர் மக்களே அமைத்துள்ளனர்.

எந்தவொரு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைச் சமாளிக்க, இந்திய திபெத் எல்லைக் காவல் படை மற்றும் CAPF உள்ளிட்ட துணை ராணுவப் படைகளை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கிராமவாசிகள் வேறு இடங்களுக்குச் சென்று வாழ்வதற்கான கல்வி மற்றும் அவசர உள்கட்டமைப்புக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாகச் செலவழிக்க தேசிய நீர்மின்சாரக் கழகம் உறுதியளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மூன்று கிராமங்களில் உள்ள மக்கள் பல்நோக்குத் திட்டத்தின் முன்-சாத்தியக்கூறு அறிக்கையை முறையாக அங்கீகரித்துள்ளனர். சர்வதேச நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத சீனா, பிரம்மபுத்திரா நதியின் தண்ணீரை நம்பியிருக்கும் நாடுகளுக்குத் தண்ணீர்த் தர வேண்டும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.

எனவே, இந்தியாவின் சியாங் பல்நோக்குத் தடுப்பணை திட்டம் மிகவும் முக்கியமானது என்று நீர்மேலாண்மை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: India responds to China: Dam construction work intensifies in Arunachal Pradeshசீனாவுக்கு இந்தியா பதிலடிஇந்திய-சீன எல்லைஅருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணிchina news today
ShareTweetSendShare
Previous Post

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

Next Post

பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை – காப்பாற்றப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்!

Related News

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies