யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும்; வாங்க கூடாது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டியில் தான் வழங்கிய பதக்கத்தை கழுத்தில் அணிய அனுமதிக்காமல் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கையில் பெற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும்; வாங்க கூடாது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என தெரிவித்தார். டிஆர்பி ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சாதனை செய்து பெரிய மனிதராக வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
தன் கையில் பதக்கம் வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் பாஜகவை மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டும் என எப்படி உயிரைக் கொடுத்து உழைக்கப் போகிறோமோ அதே போல அதிமுக தொண்டர்களும் பாஜகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான் பரஸ்பர அண்ணன் தம்பிக்கான மரியாதை என்றும் அண்ணாமலை தெளிபடுத்தினார்.