விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்
Aug 26, 2025, 09:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Aug 26, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையதள இணைப்புடன் இலவச கைக்கணினி வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் நேரங்களில் உண்மை விளம்பிகள் போலவும், ஆட்சி அமைத்தவுடன் பொய்களின் கூடாரமாகவும் மாறி மாறி இரட்டை வேடம் போடும் திமுக அரசின் போலி முகத்திரையைக் கிழித்தெறியும் நமது “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரின் அடுத்த அத்தியாயத்தில், திமுகவின் வாக்குறுதி எண் 163 என்னவாயிற்று என்பதைப் பற்றி பார்ப்போம்!

தமிழகத்தின் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 4G/5G உள்ளிட்ட 10 GB இணையதள இணைப்புடன் கைக்கணினி வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்க, சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மட்டும் கைக்கணினிகளை வாரி வழங்கி மகிழ்ந்தது திமுக அரசு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்புது திட்டங்களுக்கு விதவிதமாக பெயர் வைக்கத் தெரிந்த திமுக அரசுக்கு, அத்திட்டங்களை முறையாக நிறைவேற்றும் நிர்வாகத்திறன் சற்றும் இல்லை என்பதற்கான மற்றுமொரு சான்று இது.

படிக்கும் பிள்ளைகளின் அத்தியாவசியத் தேவையை விட, மாநகராட்சி ஊழியர்களின் அநாவசியத் தேவையை அத்தனை அவசரமாக எதற்கு நிறைவேற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் பெருங்கோபமாக இருக்கிறது.

இருப்பதையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தியதைப் போல, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகள் திட்டத்தை நிறுத்தியதோடு மட்டுமன்றி, தங்களின் தேர்தல் வாக்குறுதியான கைக்கணினிகள் வழங்கும் திட்டத்தையும் காற்றில் பறக்கவிட்டு, நமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்கு வலுவான தடைக்கல்லாக நிற்கும் இந்த விடியா அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK Stalinநயினார் நாகேந்திரன்Nayanar Nagendran mlaVidya: The darkness of Tamil Nadu will end only if the DMK government falls
ShareTweetSendShare
Previous Post

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

Next Post

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Related News

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies