இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை அமல்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பை அமெரிக்கச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய வரிகள் ஆகஸ்ட் 27 அன்று நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ரஷ்யாவிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தனது தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்கா கருதுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது.
இந்த வரி நடைமுறைக்கு வரவிருக்கும் காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.