விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர்ச் சதுர்த்தி விழா கோலகலாமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி கோயிலில் 10 நாட்களாகச் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 9-வது நாள் விழாவான நேற்று கோயிலில் தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுத் தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர்ச் சதுர்த்தி விழாவையொட்டி இரவில் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கோயில் முகப்பு, குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மின்னிய வண்ண விளக்குகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.