இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் டோக்கியோ செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபா உடனான வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பயணித்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு சீனா, செல்லும் பிரதமர் மோடி, ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஆக.31-ல் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் வருகையொட்டி, தனது அமெரிக்க பயணத்தை ஜப்பான் வர்த்தக அதிகாரி ஒருவர் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். ஜப்பானின் வர்த்தக பேச்சுவார்த்தையாளராக பணிபுரியும் ரியோசி அகாசாவா கடைசி நேரத்தி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதனால் ஜப்பான் – அமெரிக்கா இடையிலான வரிப்பகிர்வு பேச்சுவார்த்தை தாமதம் ஆகியுள்ளது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே 550 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாவதும் தள்ளிபோயுள்ளது.