தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அடுத்த வடக்கு அருணாசலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 100 தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரெனப் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு ஆலை முழுவதும் எரிந்து தரைமட்டமானது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து தப்ப முயன்ற நபர் இரும்பு கம்பி வேலியில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.