இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா - சரியும் டாலரின் ஆதிக்கம்!
Aug 30, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 09:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் மூலம், கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பொறுமையாக கட்டியெழுப்பிய இந்திய- அமெரிக்க உறவு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேற்கத்திய பொருளாதார அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்கா முதலில் என்ற தேசிய வாதத்தை முன்வைத்து அதிபர்த் தேர்தலில் வெற்றிப் பெற்ற ட்ரம்ப், அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்துள்ளார்.

அதிபரான 30 நாட்களுக்குள், கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி, வெள்ளை மாளிகையில்,பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை முன் மொழிந்தார்.

மேலும், இந்தியா- அமெரிக்கா இடையே ஒரு புதிய பரஸ்பர வரித் திட்டத்தையும் அறிவித்தார். 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட மிஷன்-500 என்ற இலக்கு அறிவிக்கப் பட்டது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டங்களை இரு தலைவர்களும் அறிவித்தனர். இதற்காக Terms of Reference குறிப்பு விதிமுறைகளிலும் கையெழுத்திடப் பட்டன.

கடந்த ஜூலைக்குள், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில், இந்தியா மீது 25 சதவீத வரியை ட்ரம்ப் விதித்தார். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை ட்ரம்ப் விதித்தார்.

50 சதவீத வரி விதிப்புக்குப் பின் இந்தியப் பங்குச்சந்தை ஆட்டம் காணும் என்று ட்ரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் இந்திய பங்குச் சந்தையில் எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக, இந்தியாவின் மீதான வரி விதிப்பின் காரணமாக 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கப் பங்கு சந்தை இழப்பைச் சந்தித்தது.

இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிப்பது என்பது உலகின் வலிமையான நபர் என்ற நினைப்பில், தனது காலில் தானே சுட்டுக் கொள்வதற்குச் சமம் என்று அமெரிக்க பொருளாதாரா வல்லுநர் ரிச்சர்ட் ஃவொல்ப் தெரிவித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான இவான் ஃபைகன்பாம், ரஷ்யா-உக்ரைன் போரை “மோடியின் போர்” என்று ட்ரம்ப் சொல்வது அபத்தமானது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததன் மூலம், இருநாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவுக்கு ட்ரம்ப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் மொத்த உற்பத்தி திறன் 35 சதவிகிதமாகும். இது ஜி-7 நாடுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. மேற்கத்திய நிதி ஆதிக்கத்தை, குறிப்பாக டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதே பிரிக்ஸ் கூட்டமைப்பின் நோக்கமாகும்.

ட்ரம்ப் தனது நடவடிக்கையின் மூலம், பிரிக்ஸ் அமைப்பை வலிமையாக்கி உள்ளார் என்றும் மேற்கத்திய அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். வரும் செப்டம்பரில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்பதை இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏற்கெனவே இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே, அமெரிக்காவின் வரிவிதிப்பு எந்த வகையிலும் இந்தியாவின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கவுள்ள இந்தியா, சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது .

இந்தியாவுடனான உறவு சிக்கலை, ட்ரம்ப் நினைத்தாலும் அவரால் இனி சரி செய்யமுடியுமா ? என்ற கேள்விக்கு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் சிக்கலானவை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்துக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்

Tags: படுகுழியில் அமெரிக்காசரியும் டாலரின் ஆதிக்கம்usaDonald TrumpThe outcome targeting India: America in the abyss - the dominance of the falling dollar
ShareTweetSendShare
Previous Post

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Next Post

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

Related News

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

இன்றைய தங்கம் விலை!

பிரதமர் மோடியுடன் ஜப்பான் நாட்டின் 16 மாகாண ஆளுநர்கள் சந்திப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் நீர் நிலைகளில் கரைப்பு!

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல் உள்ளது – பிரபல பொருளாதார நிபுணர் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மறைந்த ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியது காவல்துறை தான் – அண்ணாமலை

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் கமல்ஹாசன் தான் – நடிகர் ரஞ்சித்

ஆசியாவின் ஒற்றுமையை, பாரதத்தின் பொருளாதாரத்தை மேலோங்க செய்யும் பிரதமரின் ஜப்பான் பயணம் – நயினார் நாகேந்திரன்

பொள்ளாச்சி நகராட்சிக்கு ரூ.32 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி!

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை விரட்டிய வளர்ப்பு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies