உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் விடப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மக்களுடைய வரி பணம் வீணாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பீகாரில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிய முதல்வரின் பயணம் தோல்வி என்றும், ஆர்எஸ்எஸ், பாஜகவை பற்றி படித்து தெரிந்து கொண்டு தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் எல்.முருகன் கூறினார்.