விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் 4 மாசி வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. இதனையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. ஏராளமான கலைஞர்கள், தெய்வங்களின் வேடமணிந்து நடனமாடியபடியே சென்றதை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
இதேபோல, இலங்கையிலும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொட்டக்கலையில் நடைபெற்ற இந்த ஆன்மிக எழுச்சி ஊர்வலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள் சரக்கு வாகனங்கள் மூலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தின் இறுதியில் சிலைகள் அனைத்தும் கொட்டக்கலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.