அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் ரஷ்ய – உக்ரைன் இடையேயான போர் உள்ளிட்ட விவகாரங்களை காட்டி இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடும் வரி விதித்துள்ளார். வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அதிகார மீறலாகும் என்று விமர்சித்தது.
இந்த அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாகவும் தெரிவித்தது. இதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு சார்பில் மனு தாக்கல் செய்திருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் இத்தகைய வரிகளை விதிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.
இதனிடையே வரி விதிப்பு உத்தரவு நீக்கப்பட்டால் நாம் பொருளாதார ரீதியாக பலவீனப்படுவோம் என்றும், அவை நீக்கப்பட்டால் நாம் பேரிழவை சந்திக்க வேண்டியது இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.