தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு மதுரை மாநகராட்சியின் வரி வசூல் முறைகேடே சாட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ரூ.200 கோடி மக்களின் வரிப்பணம் கொள்ளையமடடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் செலுத்தும் வரியெல்லாம் திமுகவினருக்கே செல்கிறது என்றும், மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேட்டை தோண்டி எடுத்து வெளிபடுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சி வந்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும், அம்மா மினி கிளினிக்கில் அதிகமாக மக்கள் சிகிச்சை பெறுவதால் அந்த திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டார்.