என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளரகளிடம் பேசிய அவர், 2026 இல் தமிழகத்திற்கு நல்ல ஆட்சியை என்டிஏ வழங்க வேண்டும் என தெரிவித்தார். என்டிஏ முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன், மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் எந்த நிபந்தனையும் இல்லாமல், கூட்டணிக்கு வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தினகரனிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டதாகவும் அண்ணாமலை கூறினார். டிடிவி தினகரன் மற்றும ஓபிஎஸ் இருவரும் கண்டிபாக முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.