மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணிநேரம் கன மழை பெய்தது,
காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதியடைந்தனர். மேலும், ஒருசில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சாலைகளில் கொட்டிய குப்பைகள் மழை நீரில் மிதந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.