ஜம்முவில் சமீபத்திய வெள்ளத்தில் உஜ் நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் , சாலைகள் மற்றும் பாலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் அனைத்து பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் செல்ல அனுமதி துண்டிக்கப்பட்ட நிலையில், சிவில் நிர்வாகம் இந்திய இராணுவத்தின் உதவியை நாடியது .
கதுவாவில் உள்ள சில்லா கிராமத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு 300 கிலோ உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன்கள் மூலம் இந்திய இராணுவம் வழங்கியது.
குர்ஜ் பிரிவின் அதிகாரிகள் விரைவாக பதிலளித்தனர், ட்ரோன்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு அணிதிரட்டி, சவாலான நிலப்பரப்புகளிலும், கரடுமுரடான வானிலையிலும் செப்டம்பர் 7, 25 அன்று மாலை 5 மணிக்கு உஜ் ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ள பிளால் கிராமத்தை அடைந்தனர்.
ஆற்றின் குறுக்கே ட்ரோன் நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கி இரவு வரை தொடர்ந்தன, 150 கிலோ அத்தியாவசியப் பொருட்களை வழங்கின. நிவாரணப் பணிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை மீண்டும் தொடங்கினர் .
இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களைச் சென்றடைந்து, உணவு, தண்ணீர், மருந்துகளை வழங்குதல், மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் சாலை இணைப்பை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய ராணுவம் மற்றும் கதுவா மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.
நெருக்கடியான காலங்களில் மக்களுடன் நிற்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் மற்றும் நம்பிக்கையை வழங்குவதிலும் இந்திய இராணுவம் தனது உறுதிப்பாட்டை காண்பித்துள்ளது பாராட்டுக்குறியது.