பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் - கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!
Oct 14, 2026, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்டை நாடான நேபாளத்தில் பேஸ்புக், யூ-டியூப் உள்ள வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, GEN-Z இளைஞர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்துள்ளது. தலைநகர்  காத்மாண்டுவில் வன்முறை வெடிக்க நாடே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

நேபாளத்தில் ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற பதிவுகளை  கண்காணிக்கவும் அந்நாட்டு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டது. அதன்படி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஏழு நாட்கள் அவகாசம் வழங்கியும் விதிமுறைகள் பின்பற்றப்படாததால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதுதான் கே.பி. சர்மா ஒலி அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பேஸ்புக், யூ-டியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், ஸ்நாப்சாட் ஆகியவை முடக்கப்பட, அது நேபாள இளைஞர்களைக் கோபத்தில் ஆழ்த்தியது.

குறிப்பாக GEN-Z இளைஞர்கள் தலைநகர்க் காத்மாண்டுவில் வீதியில் இறங்கிப் போராட, நிலைமை எல்லை மீறி சென்றது. சர்மா ஒலி அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. சமூக வலைதளங்களுக்கான தடை நீக்கப்பட வேண்டும் என
இளைஞர்கள் முழக்கம் எழுப்ப, போராட்டத்தைக் கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட ராணுவத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தைக் கலைக்க ரப்பர்க் குண்டு, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை விசிறி அடித்தும் பாதுகாப்பு படையினர் இளைஞர்களை விரட்ட முயன்றனர். தடியடியும் நடத்தினர். இந்த மோதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர்க் காயமடைந்தனர்.

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ராணுவம், இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட தடை விதித்தது. ஆனால், உத்தரவை மீறிய இளைஞர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் மீது மரக்கட்டைகள் மற்றும் தண்ணீர்ப் பாட்டிகளை வீசி, அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.

நேபாள அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து தப்பிக்கவே சர்மா ஒலி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சமூக வலைதளங்களை முடக்க நினைத்தால், நேபாள் பிரதமர் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியது தான் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: nepalFacebookYouTube ban: GEN-Z youth in war mode - Kathmandu burning in Nepalthe land of unrest
Share
Tweet
SendShare
Previous Post

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

Next Post

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies