பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
Jun 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். அவரது திடீர் முடிவுக்குக் காரணம் என்ன? அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதைத் தற்போது பார்க்கலாம்..

ஜப்பானில் ஆளுங்கட்சியாக இருக்கும் Liberal Democratic Party-யில் பூதாகரமாக வெடித்த உட்கட்சி பூசல்… உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி. போன்ற பல்வேறு காரணங்களால் பிரதமர்  பதவியில் இருந்து விலகியுள்ளார் பிரதமர் ஷிகேரு இஷிபா..

68 வயதான இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஜப்பான் பிரதமர்  பொறுப்பில் இருந்து வந்தார். அமெரிக்க வரி விதிப்பு, அதனால் ஏற்பட்ட அசாதாரணமான சூழல், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பிரதமர்  பொறுப்பை கவனித்து வந்தார் இஷிபா.

குறிப்பாக ஜப்பானிய மக்களின் பிரதான உணவான அரிசி மீது அமெரிக்கா அதிக வரியை விதித்தது. இதன் விளைவாக உள்ளூர்ச் சந்தையில் அரிசியின் விலைக் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

இதன் காரணமாக ஆளும் Liberal Democratic Party-க்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, கட்சியில் ஏற்பட்டுள்ள தொடர் அழுத்தத்தின் காரணமாகவும் இஷிபா தனது பதவியைத் துறந்ததாகக் கூறப்படுகிறது..

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷிகேரு இஷிபா, Liberal Democratic Party தலைவர்  பதவியில் இருந்தும், பிரதமர்  பதவியிலிருந்தும் விலகுவதாகக் கூறினார். இந்தத் தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடமையை கடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்ட குரலில் பேசியது அனைவரையும் கவலைக் கொள்ள செய்தது.

ஜப்பானில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தேர்தலில் ஏற்பட்ட தொடர்  தோல்விகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மைப் பலத்தை விட குறைவான உறுப்பினர்களைக் கொண்ட Liberal Democratic Party, கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது…

இந்த நிலையில், இஷிபாவுக்கு அடுத்தபடியாக, அவரது அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த ஷின்ஜிரோ கொய்சுமி கட்சியின் புதிய தலைவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சநே டகாய்ச்சி, டகாயூகி கோபயாஷி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோரிடையே கடும் போட்டி இருக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனினும் கட்சி தலைமைக்கான தேர்தல்தான் புதிய தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும்.

Tags: Japanese Prime Minister resigns: What is the reason for Ishiba's sudden decision?இஷிபாபதவி விலகினார் ஜப்பான் பிரதமர்
ShareTweetSendShare
Previous Post

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

Next Post

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies