சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை சந்திக்காமல் தவெக தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
சனிக்கிழமைகளில் மட்டும் தவெக தலைவர் விஜய் மக்களை சந்திப்பதை ஏற்க முடியாது என்றும் மாற்றுச் சக்தி எனக் கூறும் தவெக 24 மணி நேரமும் மக்களுக்காக இருக்க வேண்டும் என்றும் தவெகத் தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
திமுக தான் எதிரி எனப் பறைசாற்றும் தவெகக் களத்திலும் வேகத்தைக் காட்ட வேண்டும் என்று சுற்றுப்பயணத்துக்கு தவெகவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது என்றும் திமுகவுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்று அண்ணாமலை தெரிவித்தார்.