கேரளாவில் மூளையை திண்ணும் அமீபியா தொற்றால் கடந்த ஒரு மாதத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் சாஜி என்பவர் அமீபிக் மூளைத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்குக் கல்லீரல் தொடர்பான குறைபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இந்தத் தொற்று ஏற்பட்டு 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலப்புரத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த நோய்த்தொற்றின் விளைவை கருத்தில் கொண்டு நகராட்சி மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.