திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் கார் கண்ணாடியை உடைத்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரிய கொமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஷோபனா கோவிந்தராஜ் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் .
இவரின் கனவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் கொலை செய்த நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் குடும்ப பிரச்னைக் காரணமாக ஷோபனாவின் உறவினரான சந்தோஷ் என்பவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதன் காரணமாகச் சீவூரில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற ஷோபனா அங்கேயே வசித்து வந்தார்.
இவர் வழக்கம் போல வீட்டில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டை அடித்து உடைத்தும், கார் கண்ணாடியை உடைத்துவிட்டும் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.