கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் நிகழ்சிக்காகச் சென்ற போது, லாரி ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சாலை மார்க்கமாகக் காரில் சென்றார்.
முதலமைச்சர் செல்லும் சாலையில் நிற்க வைப்பதற்காகச் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பெண்களை, திமுகவினர் வேனில் அழைத்துச் சென்றனர்.
அப்போது பின்னால் வந்த லாரிக்கு வழிவிடாமல் வேன் ஓட்டுநர் நீண்ட தூரம் இயக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வழிவிட கோரி லாரி ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி லாரியை இடை மறித்து ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.