வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று கணிக்க முடியாது என்பதை உணர்த்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உடல்நிலைச் சரியில்லை என விடுப்பு கேட்டுக் குறுஞ்செய்தி அனுப்பிய நபர், அடுத்த 10 நிமிடங்களில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 40 வயதான சங்கர் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முதுகுவலி காரணமாக விடுமுறைக் கேட்டு காலை 8.37 மணிக்கு மேலாளருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.
சரி ஓய்வு எடுங்கள் என மேலாளர் கே.வி.ஐயர் விடுப்பு அளித்துள்ளார். ஆனால் அடுத்த 10 நிமிடங்களில் மாரடைப்பு காரணமாக ஷங்கர் உயிரிழந்ததாகக் கே.வி.ஐயருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கே.வி.ஐயர், சங்கருக்கு, புகைபிடித்தல், மது போன்ற எந்தப் பழக்கமும் இல்லை; வாழ்க்கைக் கணிக்க முடியாதது; உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாக இருங்கள்; மகிழ்ச்சியாக வாழுங்கள்; ஏனென்றால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.