இரண்டு பெரிய போர்களைக் கண்டுள்ள உலகம், அதன் விதிகளை எளிதில் மாற்றிக் கொள்ளாது. ஆனால், ஒரு புதிய உலக ஒழுங்கு, இந்தியாவின் தலைமையில் கண்ணுக்குத் தெரியாமல் உருவாகி உள்ளது. சர்வதேச உறவுகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பிரதமர் மோடியின் தலைமையில் எவ்வாறு மறுவடிவமை என்பது பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து, கடந்த 11 ஆண்டுகளாக, ஒரு புதிய இந்தியா அமைதியாக ஆளுமையுடன் வளர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கைத் தேசத்தின் வளர்ச்சிக்கானது.
இந்தியாவின் தேர்தல் பிரச்சாரத்தில் எப்போதுமே நாட்டின் வெளியுறவுக் கொள்கை முக்கியமானதாகப் பேசப்பட்டதில்லை. ஆனால்,பிரதமர் மோடி அதற்கு விதிவிலக்காக இருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவை ” விஸ்வகுரு ” வாக உலகத் தலைமையாக நிலைநிறுத்துவது என்ற பிரதமர் மோடியின் முழக்கமே பாஜகவால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடியையே தேசத்தை வழிநடத்த இந்திய மக்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள். இதுவே பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிச் சான்றிதழ் ஆகும்.
பல ஆண்டுகளாகவே, வளரும் நாடுகளில் மதசார்பற்ற தாராளமய ஜனநாயகத்தின் முன்னோடியாக இந்தியா தன்னைச் சித்தரித்து வைத்திருந்தது. இந்தப் பிம்பத்தை மாற்றிய பிரதமர் மோடி, பாரதத்தை வேதப் பாரம்பரியத்தின் அடிப்படையில் உலகை ஒருங்கிணைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
மகா உபநிடத்தின் ஆறாவது அத்தியாயத்தில் வரும் வசுதைவ குடும்பகம் எனும் மந்திரச் சொல்லை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் குறிக்கோளாகப் பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.
2023-ல் இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி-20 மாநாட்டின் சின்னத்திலும், “வசுதைவ குடும்பகம்”- “ஒரு பூமி-ஒரே குடும்பம்-ஒரு எதிர்காலம்” என்ற மந்திரச் சொல்லே பொறிக்கப்பட்டிருந்தது.
“வசுதைவ குடும்பகம்” என்ற இலக்கை அடைவதில், பிரதமர் மோடி இந்தியாவின் நீண்டகால நடுநிலைமை, அணிசேராமைப் போன்ற கொள்கைகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், ‘எல்லோருடனும் இருப்பது’ என்ற புதிய நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி வெற்றிகரகமாக நடைமுறைப் படுத்தியுள்ளார். மற்ற அனைத்தையும் விட இந்தியாவின் இறையாண்மையையே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகப் பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
எந்த நாட்டின் கைப்பாவையாகவும் இல்லாமல், ஒவ்வொரு நாட்டுடனும் சமநிலையான நட்புறவைப் பேணி வருவதை உலகமே ஆச்சரியமாகப் பார்க்கிறது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமைக் கொடுப்பது, கிழக்கு நோக்கி உலகைச் செயல்பட வைப்பது, மத்திய ஆசியாவை ஒன்றிணைப்பது, அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வது, நடைமுறைக்கேற்ற புவிசார்ப் பொருளாதாரத்தை உருவாக்குவது, இந்திய புலம்பெயர்ந்தோரையும் தேசத்துக்குப் பணியாற்ற வைப்பது, தேசப் பாதுகாப்பில் தெளிவான சிவப்பு கோடுகளை வரைந்தது, உலகளாவிய பெரும் சக்திகளைச் சமநிலைப்படுத்துவது, அனைத்து நாடுகளிலும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான தலைமையேற்று உதவி செய்வது -இவையெல்லாம் தாம் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் சிறப்பம்சங்கள்.
அமைதியை ஏற்படுத்தியதற்காகப் பிரதமர் மோடிக்கு உக்ரைன் நன்றித் தெரிவிக்கிறது. அமைதியை மேம்படுத்தியதற்காகப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா நன்றித் தெரிவிக்கிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி தனது நல்ல நண்பர் என்று அமெரிக்க அதிபர்த் தெரிவிக்கிறார். இந்தியா அமெரிக்க உறவை வலுப்படுத்துவது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ட்வீட் செய்கிறது. இந்தியாவிடமிருந்து வெளியுறவுக் கொள்கையைக் கற்றுக்கொள்வதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
ரஷ்யாவிலிருந்து மலிவான கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, அமெரிக்காவுடனான உறவுகளை நிலையானதாக வைத்துள்ளது. அதிபர் ட்ரம்பின் ரம்பின் ஈகோவை மழுங்கடித்த பிரதமர் மோடி, வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டைத் தன் நிரலுக்கு ஏற்பபேச வைத்திருக்கிறார்.
பிரான்ஸுடன் ரஃபேல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவரைச் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி இந்தியாவுக்கு வரவழைத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை உறவுகளை 100 மடங்கு மேம்படுத்திய பிரதமர் மோடி, ஆசியான் உறவுகளையும் வளர்த்தெடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் QUAD அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்து, இந்திய பசிபிக் பகுதியின் பாதுகாப்பைப் பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார். இந்தியாவின் எந்தப் பிரதமரும் இவ்வளவு ஆழமான உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.
முதல் முறையாக இந்தியா முதலில் என நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதமர் மோடி வடிவமைத்துள்ளார். இதையெல்லாம் உலகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவில்லை; புதிய இந்தியாவை அங்கீகரித்து மதித்துப் பாராட்டத் தொடங்கியுள்ளது.
நாட்டின் 72-வது சுதந்திரத் தினத்தன்று நட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லோரும் அமரர் நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி இருந்தார்.
உண்மையிலேயே இந்தியா உலகிலேயே சிறந்த நாடாக மட்டும் திகழாமல், மற்ற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருந்து உலகத்தையே வழிநடத்தி விஸ்வ குருவாகப் பிரதமர் மோடி, உலகத்துக்கே வழிக் காட்டி வருகிறார்.