கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை ஒட்டி அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கரூரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதன் காரணமாகக் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனால் வெளியூர் செல்லும் பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் திமுகவின் முப்பெரும் விழாவை ஒட்டி அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது. இதனிடையே கரூர் நகரப் பகுதில் சாலையின் இருபுறங்களிலும் திமுக பேனர்கள் வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.